1956 இன் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சகல இறப்பர் வர்த்தகர்களுக்கும் வியாபார அனுமதி பத்திரத்தை இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் வழங்குகின்றது. ஒவ்வொரு வருடமும் இறப்பர் விற்பனையாளர்களுக்கு வியாபார அனுமதி பத்திரத்​தை வழங்குவதற்கும் மற்றும் புதுப்பிப்பதற்கும் வருடாந்தம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வியாபார அனுமதிப் பத்திரத்தை பெறாது இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஏற்கனவே இது போன்ற அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் வியாபாரிகள்  ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும் விண்ணப்பப் படிவங்கள் தபால் மூலம் பெறுவர்.

புதிதாக இறப்பர் வியாபார அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு அல்லது புதுப்பித்தலுக்கு  சரியான படிவத்தைப் பயன்படுத்தி தொடர்பான பிராந்திய அலுவலகத்திற்கு அல்லது தலைமை அலுவலகத்திற்குத் தேவைக்கேற்ப விண்ணப்பிக்க வேண்டும். மூலப் பொருளாக  இறப்பர் பாலை சேகரிக்கும் நிலையங்களை பராமரிப்பவர்களும் அத்தகைய அனுமதி பத்திரத்தை பெறுதல் வேண்டும் அத்துடன் இறப்பர் அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் என முகவரியிடப்பட்டு RC13, RC14 எனும் மாதிரி படிவங்ளை பயன்படுத்தி மாதாந்த அறிக்கைகளை தயாரித்து அனுமதி பத்திரத்துடன் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். தற்போது தணைக்களத்தினால் நாடு முழுவதும் சுமார் 570 வியாபார அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வியாபார அனுமதிப் பத்திரத்திற்கு  விண்ணப்பிப்பதற்கான தேவைப்பாடுகள்

  • அப்பகுதியின் தொடர்புடைய அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் வியாபார அனுமதி.
  • 50 கிலோ எடையுள்ள எடை இயந்திரம்.
  • நிறுவனத்தின் பதிவு சான்றிதழ்.
FaLang translation system by Faboba