இறப்பர் புதிய நடுகை
இலங்கையில் இறப்பர் பயிர்ச் செய்கையின் விரிவாக்கப் பணிகளில் படிப்படியாக அதிகரிப்பை உறுதிசெய்து, இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதே திணைக்களத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். புதிய இறப்பர் நடுகை தொடர்பான இந்த பணியில், இறப்பர் செய்கைக்கு மானியமாக இறப்பர் கன்றுகள் சிற்றளவிலான பங்குதாரர்களுக்கு மாத்திரமே கிடைப்பதாகவுள்ளது. அவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்குப் புதிய வருமான வழிகளை உருவாக்குதல், விவசாயம் செய்யப்படாத நிலங்களை இறப்பர் செய்கையின் கீழ் கொண்டு வந்து அந்நிலங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் புதிதாக இறப்பர் நடுகை மூலம் இலங்கையின் காடுகளின் விரிவாக்கத்தை மேம்படுத்துதல் போன்ற மீதமான இலக்குகளையும் அடைவதே திணைக்களத்தின் எதிர்பார்ப்பாகும். புதிய இறப்பர் நடுகை தொடர்பான இலக்குகளை மேற்கொள்ளும் இந்தப் பயிற்சியில், பாரம்பரிய மாவட்டங்களான கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மற்றும் பாரம்பரியமற்ற மாவட்டங்களான மொனராகலை மற்றும் பதுளை ஆகியவை அவற்றின் பங்களிப்புகளில் மிகவும் முக்கியமானவை.
இறப்பரை மீள் நடுகை செய்வதற்கு அல்லது புதிதாக நடுகை செய்யும் நோக்கத்திற்காக, 1953 இன் 36 ஆம் இலக்க இறப்பர் மீள் நடுகை சட்டத்தின் பிரிவு 07 இன் பிரகாரம் அனுமதி பெறப்படுதல் வேண்டும். இந்தச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய அனைத்து இறப்பர் நிலங்களும் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
இறப்பர் மீள் நடுகை
இறப்பர் நிலங்களில் நடப்பட்டுள்ள இறப்பர் மரங்கள் நன்கு முதுமை நிலையில் காணப்படுவது மற்றும் அவ்வாறு பயிரிடப்பட்ட மரங்கள் அதிக அறுவடையை தரவல்ல குளோன் clones வகையும் அல்ல, அதே நேரத்தில் நிலங்கள் மிகவும் குறுகிய காலமாக உள்ளன. இறப்பர் பயிரிடப்படும் நிலங்களில் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பது போன்ற காரணிகள் பிரதான காரணமாகும். எனவே, இலக்கு வைக்கப்பட்ட தோட்டங்களில் எதிர்பார்த்த உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக அவற்றில் காணப்படும் பழைய இறப்பர் செய்கையை நீக்கிய பிறகு இறப்பர் மீள் நடுகை செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.