ஹெவியா பிரேசிலியென்சிஸ் (Heavea Brasiliensis) என்ற விஞ்ஞானப் பெயர் கொண்ட பாரா இறப்பர் (Para Rubber) ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் ஒரு சூழல் நட்புப் பயிராக வர்த்தக ரீதியாக பயிரிடப்படுகிறது. 1876 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறப்பர் மரத்தை சேர் ஹென்றி விக்ஹாம் (Sir Henry Wickham) என்பவர் அறிமுகம் செய்து வைத்தார். முதலாவது இறப்பர் மரம் கம்பஹாவில் அமையப் பெற்றுள்ள ஹெனரத்கொட தாவரவியல் பூங்காவில் நடப்பட்டது எனலாம். அதன் பிறகு அதன் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டுக்குப் பின்னர் களுத்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிர்ச் செய்கையானது மேற்கு, மத்திய மற்றும் தெற்குப் பிராந்தியங்களிலும் விஸ்தரிக்கப்பட்டது.

இறப்பர் பிரதானமாக கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. மேலும், அதிகமாக இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவது மாத்தறை, காலி, கண்டி, மாத்தளை, குருநாகல், பதுளை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் ஆகும். மேலும் தற்போது அதிக விகிதாசாரத்தில் செய்கைபண்ணப்படுவது மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஆகும். அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்ததாக குறைந்த விகிதாச்சாரத்தில் அம்பாந்தோட்டை, வவுனியா மற்றும் அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் செய்கை மேற்கொள்ளப்படுகின்றன.

1934 இன் 06 ஆம் இலக்க கட்டளை சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இறப்பர் கட்டுப்பாட்டு திணைக்களம் 1994 ஆம் ஆண்டு முதல் இறப்பர் அபிவிருத்தி திணைக்களமாக (RDD) மாற்றப்பட்டது. கட்டளைச்சட்டங்கள் மற்றும் இறப்பர் தோட்ட சட்டங்கள் மூலம் கௌரவ. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பை இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் (RDD)மேற்கொண்டு வருகின்றது.

அதிகளவிலான பெறுமதி சேர்க்கப்பட்ட இறப்பர் அடிப்படையிலான பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் இந்த நாட்டின் உற்பத்தி செய்யப்படுகின்ற அவ்வுற்பத்திகளின் உயர்தரம் மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் தன்மை என்பன காரணமாக சர்வதேச ரீதியில் அவற்றிற்கான கேள்வி மிகவும் அதிகமாக காணப்படுகின்றன. இலங்கையில் இறப்பர் சார்ந்த கைத்தொழில்கள் அதிகரித்து வருவதோடு, அதன் முதல் நிலையாக ஏற்றுமதி செய்யப்படும் மூலப் பொருளான இறப்பருக்குப் பதிலாக உச்ச விலையில் இறப்பர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவிலான அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ள முடியும்.

FaLang translation system by Faboba