மீள் நடுகை/புதிய நடுகைக்காக கன்றுகளை விநியோகிக்கும் போது பரிந்துரைக்கப்பட்ட குளோன்களின் clones உயர்தரமான நடுகை பொருட்களை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 8 நாற்று மேடைகளை ஸ்தாபித்து பராமரிப்பதன் மூலம் அவ்வாறே அவற்றினை வழங்குவதற்கான பொறுப்பை திணைக்களம் ஏற்றுக்கொள்கிறது.

இந்த நாற்றுமேடைகளில் உற்பத்தி செய்யப்படும் இறப்பர் கன்றுகள்  பருவமழை துவங்கியவுடன் ஆண்டுக்கு இருமுறை விநியோகிக்கப்படுகிறது. கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, கண்டி, குருநாகல், மாத்தளை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு மே/ஜூன் மற்றும் அக்./நவ. மாதங்களிலும் மற்றும் மொனராகலை, பதுளை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் செப்./டிசம்பர். மாதங்களில். 

இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பின்வரும் நாற்று மேடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

1953 ஆம் ஆண்டு இறப்பர் கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் 128 ஏக்கர் பரப்பளவில் இந்த நாற்று மேடைகள் விரிவாக்கப்பட்டுள்ளது. இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தினால் இந்த நாற்று மேடைகள் முகாமை செய்யப்படுகின்றன. எகலோயா நாற்றுமடையானது ஆசியாவிலேயே மிகப் பெரிய மொட்டு மர ரப்பர் நாற்றுமேடையாக புகழ் பெற்றுள்ளது. தற்போது 43 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது.

உலக வங்கியின் இரண்டாம் கட்ட செயற்திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவில் 1989 ஆம் ஆண்டு இறப்பர் கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் இந்த நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டது. இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தினால் இந்த நாற்றுமேடை முகாமை செய்யப்படுகின்றது. இது ஹொரணை கைத்தொழில் வலயத்திற்குட்பட்டதால், இது குறுகிய காலத்திற்கு மூடப்பட்டு 2003 ஆம் ஆண்டு மீண்டும் தாவரங்களின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாற்றுமேடையானது 50 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்தோடு இதுவே இரண்டாவது பெரிய நாற்றுமேடையாகும். இந்த நாற்றுமேடை நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் அமையப்பெற்று இருப்பதால், நாட்டின் எந்தப் பகுதிக்கும் கன்றுகளை கொண்டு செல்வதற்கு இயலுமாக உள்ள அதிக திறன் கொண்ட நாற்றுமேடையாக இதனை அறிமுகப்படுத்தலாம்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் இறப்பர் கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் 1986 ஆம் ஆண்டு இந்த நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நாற்றுமேடை உலக வங்கியின் சிறிய இறப்பர் தோட்டங்களை புனரமைக்கும் செயற் திட்டத்தின் கீழ் தரமான முதிர்ச்சியடையாத மொட்டு மர இறப்பர் உற்பத்திக்கான முன்னோடியாக அறிமுகப்படுத்தப்படலாம். இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் கேகாலை பிராந்திய அலுவலகத்தின் கீழ் இந்த நாற்றுமேடை முகாமை செய்யப்படுகின்றது. இந்த நாற்றுமேடையின் நிலத்தின் பரப்பளவு 42 ஏக்கர் மற்றும் இது முழு அளவிலான fully-fledged நாற்றுமேடையாக பராமரிக்க முடிந்தது.

உலக வங்கியின் இரண்டாம் கட்ட செயற் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் இறப்பர் கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் 1990 ஆம் ஆண்டு இந்த நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டது. இப்போது இது இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் கேகாலை பிராந்திய அலுவலகத்தால் முகாமை செய்யப்படுகின்றது. இது புறநகர்ப் பகுதியின் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஒரே நாற்றுமேடையாக அறிமுகப்படுத்தப்படலாம். இந்த நாற்றுமேடை மைந்துள்ள நிலத்தின் பரப்பளவு 26 ஏக்கர் ஆகும்.

மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவில் 2004 ஆம் ஆண்டு இந்த நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நாற்றுமேடை மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டது. அத்துடன் அதன் சுற்றளவு dimension 50 ஏக்கர் ஆகும். இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் மொனராகலை பிராந்திய அலுவலகத்தின் கீழ் இது முகாமை செய்யப்படுகின்றது. பாரம்பரிய இறப்பர் பயிர்ச் செய்கை இல்லாத பிரதேசங்களில் இறப்பர் செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த நாற்றுமேடை 2006 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மித்தெனிய பிரதேச செயலாளர் பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது இது இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் காலி பிராந்திய அலுவலகத்தின் கீழ் முகாமை செய்யப்படுகின்றது. பாரம்பரிய இறப்பர் செய்கை இல்லாத ஹம்பாந்தோட்டையை சூழவுள்ள பிரதேசங்களில் இறப்பர் செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலப்பரப்பில் இந்த நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த நாற்றுமேடை 1985 ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவில் இறப்பர் கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது இது 32 ஏக்கர் நிலப்பரப்பளவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இது இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் இரத்தினபுரி பிராந்திய அலுவலகத்தின் கீழ் முகாமை செய்யப்படுகின்றது. சிறிய இறப்பர் நிலங்களை புனரமைப்பதற்காக உலக வங்கியின் திட்டத்தின் கீழ் ஸ்தாபிக்ப்பட்ட முதல் நாற்றுமேடை இதுவாகும். நாற்றுமேடைகளுக்கு தேவையான அனைத்துத் தேவைகளையும் கொண்ட நிலத்தைக் கண்டறிவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிரந்தரமான நீர் மூலம் இல்லாததன் காரணமாக சிறிய நீர்த்தேக்க தொட்டியில் reservoir இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. மண்ணின் நிலையை மேம்படுத்தும் வகையில் சேதன உரம் மற்றும் அத்தகைய மாற்றுப் பொருட்களை மண்ணில் கலக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தினால் பதியத்தலாவையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவில் 2017 ஆம் ஆண்டு இந்த நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டது. பாரம்பரிய இறப்பர் செய்கை இல்லாத பகுதிகளில் இறப்பர் செய்கையை பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டது. இது மொனராகலை பிராந்திய பணிமனையினால் முகாமை செய்யப்படுகின்றது. இதன் பரப்பளவு 50 ஏக்கர்களாகும்.

FaLang translation system by Faboba